உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மானிய விலையில் விதைகள் வேளாண் துறை அழைப்பு

மானிய விலையில் விதைகள் வேளாண் துறை அழைப்பு

சோமனூர : சூலூர் வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் மற்றும் பூஞ்சாண கொல்லிகள் சோமனூர் வேளாண் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. சூலூர் வட்டாரம் சோமனூர் துணை வேளாண் அலுவலகத்தில், மானிய விலையில் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. சோளம் கோ 32 விதை கிலோ 40 ரூபாய் வம்பன் பயிறு கிலோ, 63 ரூபாய், உளுந்து, கிலோ, 51 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. உயிர் பூஞ்சாண கொல்லிகள் டிரைக்கோ டெர்மா விரிடி, 135 ரூபாய்க்கும் சூடோமோனாஸ், 90 ரூயாய்க்கும் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படுவோர், சோமனூர் துணை வேளாண் அலுவலக உதவி வேளாண் அலுவலர் திருக்குமரன் - 83001 15900 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ