உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேம்ப் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

கேம்ப் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

போத்தனூர்:போத்தனூர் அருகே ரயில்வே காலனியில் உள்ள கேம்ப் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த, 6ல் மகாகணபதி ஹோமத்துடன் துவங்கியது.தொடர்ந்து பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் நடந்தன. இரண்டாம் நாள் காலை, பேச்சியம்மன் கோவிலிலிருந்து கரகம், பூவோடு அழைத்து வருதலும், மாலை அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடந்தன. திரளானோர் பங்கேற்றனர்.நேற்று முன்தினம் காலை பொங்கல் வைத்தல், மாவிளக்கு வழிபாடு நடந்தன. நேற்று மதியம் மகா அன்னதானம், மாலை கோவில் வளாகத்தில் உற்சவர் அலங்கார ஊர்வலமும் நடந்தன. இன்று மாலை அம்மனுக்கு 108 சங்காபிஷேகம், ஆராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ