உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிறந்த நாளில் ரிசல்ட் வெற்றிக்கனி கிடைக்குமா?

பிறந்த நாளில் ரிசல்ட் வெற்றிக்கனி கிடைக்குமா?

வரும் ஜூன் 4ம் தேதி பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின் 40வது பிறந்த நாள். இவரது பிறந்த நாளன்றே, லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலையை வெற்றி பெறச் செய்து, தேர்தல் வெற்றியை பிறந்தநாள் பரிசாக அளிக்க பா.ஜ., தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.தொண்டர்கள் கூறுகையில், ''மாநில தலைவர் அண்ணாமலை வெற்றி பெற்றால் மட்டுமே, கோவை தொகுதியின் வளர்ச்சிக்கு அது உதவும். இதற்காகவே, அண்ணாமலையும் நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்கிறார். அவருக்கு வெற்றிக்கனியை பிறந்த நாள் பரிசாக வழங்க உள்ளோம். ஓட்டு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம், அண்ணாமலைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, நிச்சயம் அவர் வெற்றி பெறுவது உறுதி'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை