உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரக்கன்றுகள் பராமரிப்பு அவசியம்

மரக்கன்றுகள் பராமரிப்பு அவசியம்

கோவை:பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்கீழ் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்கள், குளக்கரைகள், நீர் வழித்தடங்கள் என, முதற்கட்டமாக, 264 இடங்களில் வேம்பு, பூவரசன், புங்கன், நாவல் என நாட்டு மரங்கள் அதிகம் நடப்படுகின்றன.இதில், 10 ஆயிரத்து, 123 மரங்கள் நட முடிவு செய்யப்பட்டு, கடந்த மாதம், 27ம் தேதி முதல் இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன. ஆடு, மாடுகளிடமிருந்து பாதுகாக்க மரங்களை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். தினமும் தண்ணீர் ஊற்றவில்லையேல் மரங்கள் கருகி அரசின் நோக்கமே வீணாகிவிடும். எனவே, தினமும் தண்ணீர் ஊற்றி மரங்கள் முழு உயிர்பெறும் வகையில் பராமரிக்க வேண்டும் என்பது சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை