உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தண்டவாளம் பராமரிப்பு ரயில் சேவையில் மாற்றம்

தண்டவாளம் பராமரிப்பு ரயில் சேவையில் மாற்றம்

கோவை: சேலம் கோட்டத்தில் நடந்து வரும் தண்டவாளம் பராமரிப்பு பணிகளால், இரண்டு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் (எண்: 13352), வரும் 8, 10, 13, 15 மற்றும், 17ம் தேதிகளில் போத்தனுார் - இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வராது.இதேபோல், எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்: 12678), வரும் 8, 10, 13, 15 மற்றும், 17ம் தேதிகளில், போத்தனுார் - இருகூர் வழியாக இயக்கப்படும்.இந்த ரயில் கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வராது என, தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி