உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

உடுமலை: உடுமலையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், 16ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.கிராமங்களில் வசிக்கும் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண, அனைத்து அரசு துறைகள் பங்கேற்கும், 'மக்களுடன் முதல்வர் திட்டம்' ஊரக பகுதிகளில் துவங்கியுள்ளது.உடுமலை ஒன்றியத்திற்பட்ட, பூலாங்கிணர், ராகல்பாவி, ஆர்.வேலுார், கணபதிபாளையம், அந்தியூர் ஆகிய கிராம மக்களுக்கு, நாளை மறுநாள், (16ம் தேதி), முக்கோணம் கிருஷ்ணகானம் திருமண மண்டபத்தில் நடக்கிறது. முகாமில், பொதுமக்கள் பங்கேற்று, அனைத்து அரசு துறைகள் சார்ந்த பணிகளுக்கு மனு கொடுக்கலாம், என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை