உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதிப்பெண்களை அள்ளிய சின்மயா

மதிப்பெண்களை அள்ளிய சின்மயா

கோவை;ஆர்.எஸ்.புரத்திலுள்ள சின்மயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் நிஷ்டா பத்ரா 485 மதிப்பெண் பெற்று முதலிடமும், ஜெயஸ்ரீ 481 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், அனகநந்தா 476 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.மேலும் 23 மாணவர்கள், 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். சிறந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை