| ADDED : ஆக 13, 2024 01:02 AM
ரயில் மோதி ஆண் பலி
போத்தனுார்-மதுக்கரை ரயில்வே தண்டவாளம், மதுக்கரை மார்க்கெட்அருகே, 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், போத்தனுார் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆணின் உடலை சோதனை செய்தனர். அதில், அவரது வலது கையில் 'பிரேமா' என பச்சை குத்தப்பட்டு இருந்தது. ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, ரயில் மோதி இறந்தவர் யார் என்று விசாரிக்கின்றனர். மது விற்பனை
ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று முன்தினம் இரவு, ரயில்வே ஸ்டேஷன் எதிரே கீதா ஹால் ரோட்டில் ரோந்து சென்றனர். அங்குள்ள தனியார் பார் அருகே, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பழனிவேல்,33, என்பவரிடம், 22 மது பாட்டில்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த போலீசார், பின்னர் ஜாமினில் விடுவித்தனர். செந்தில்குமார் என்பவரை தேடுகின்றனர்.