உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை எஸ்.பி., அலுவலகத்தில் கூடுதல் டி.ஜி.பி., திடீர் விசிட்

கோவை எஸ்.பி., அலுவலகத்தில் கூடுதல் டி.ஜி.பி., திடீர் விசிட்

கோவை;கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், நிர்வாகப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., வினித்தேவ் வான்கெடே, நேற்று ஆய்வு செய்தார்.தொடர்ந்து, மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பி., பத்ரிநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன், குற்ற வழக்குகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.அப்போது, குற்ற சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தேவையான இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பது, கடந்த ஆறு மாதங்களில் பதிவான வழக்குகளும், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிலுவை வழங்குகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.மாலை, 5:00 மணி வரை கூட்டம் நடந்த நிலையில், குற்றங்களை கட்டுப்படுத்துவற்கான வசதிகளை அதிகரிப்பது குறித்தும், அதிகாரிகள் கருத்துக்களை முன்வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை