உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வயநாட்டில் இறந்தவர்களுக்கு கல்லுாரி மாணவர்கள் அஞ்சலி

வயநாட்டில் இறந்தவர்களுக்கு கல்லுாரி மாணவர்கள் அஞ்சலி

பொள்ளாச்சி: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு, பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.கேரள மாநிலம், வயநாடு மாநிலம், முண்டக்கல், சூரல்மலை பகுதியில், பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், நுாற்றுக்கணக்கான வீடுகள் புதையுண்டன. இதில், 350க்கும் மேற்பட்டர்கள் உயிரிழந்தனர்.நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து பலர் மீட்கப்பட்ட நிலையில், பாதுகாப்பான இடத்தில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக் கரம் நீட்டும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பியும் வைக்கின்றனர்.அணிவதற்கான உடை, படுக்கை விரிப்பு, போர்வை, பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள் அனுப்புகின்றனர்.பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி, சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், மாணவ, மாணவியர் வாயிலாக அத்தியாவசிய பொருட்கள் சேகரம் செய்யப்பட்டு, கேரள மாநிலம் வயநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதேநேரம், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. கல்லுாரிச் செயலாளர் விஜயமோகன் தலைமை வகித்தார். முதல்வர் வனிதாமணி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்த கொண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி