| ADDED : ஜூன் 08, 2024 01:44 AM
கோவை;தமிழகத்தில் வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆலோசனைநடத்தினார்.ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 83 ஆரம்பப் பள்ளிகள் மற்றும் 37 நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள், சுற்றுப்புறங்கள், சத்துணவு கூடம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் துாய்மை பணிகள் குறித்தும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் அறிவுரை வழங்கினார்.மாநகராட்சி கல்வி அலுவலர் தாமஸ் சேவியர், மேற்பார்வையாளர்கள், ஆரம்பப் பள்ளி, நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.