| ADDED : ஜூலை 04, 2024 05:09 AM
கோவை: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முன்னாள் படைவீரர்கள் குறைகேட்பு கூட்டத்தில் 27 மனுக்கள் மீது, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது.கோவையை சேர்ந்த முன்னாள் படைவீரர், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் படைவீரர் குடும்பத்தினர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, பட்டாமாறுதல், இலவச வீடு, சிறப்பு நிதியுதவி, குடிநீர் இணைப்பு, வேலைவாய்ப்பு, கடனுதவி, உள்ளிட்ட, 27 கோரிக்கைகளை கலெக்டரிடம் சமர்ப்பித்தனர்.பெற்ற மனுக்களின் மீது, உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண, அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், உதவி இயக்குநர்(முன்னாள் படைவீரர் நலன்) மேஜர் ரூபா சுப்புலெட்சுமி, மாவட்ட முப்படை வீரர் வாரிய உபதலைவர் கேப்டன் ஸ்ரீகணேஷ் ராஜ் (ஓய்வு) மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.