உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காங்., கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

காங்., கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கோவை: லோக்சபா தேர்தலில் 'இண்டியா' கூட்டணி அதிக இடங்களை பிடித்ததை, கோவை மாநகர காங்., கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில், காங்., தலைமையிலான 'இண்டியா' கூட்டணி, 232 இடங்களை பிடித்தது. இதை கோவை மாநகர காங்., கட்சியினர், நேற்று காந்திபார்க் பகுதியில், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் மனோகரன், மாநில துணைத் தலைவர் அழகு ஜெயபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்