உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழுதான காரை ஏமாற்றி விற்பனை இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு 

பழுதான காரை ஏமாற்றி விற்பனை இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு 

கோவை:பழுதான காரை, நல்ல நிலையில் இருப்பதாக கூறி ஏமாற்றி விற்பனை செய்ததால், இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. கோவை ராஜவீதியை சேர்ந்த சரவணன் என்பவர், வாடகை காரில் பயணம் செய்த போது, அந்த காரின் டிரைவர் அரவிந்துடன் நட்பு ஏற்பட்டது. அப்போது, பழைய கார் வாங்குவது தொடர்பாக அவரிடம் பேசினார். கார் விற்பனை செய்யும் முகவராக இருப்பதால், குறைந்த விலைக்கு, நன்றயாக ஓடக்கூடிய கார் வாங்கி தருவதாக அரவிந்த் கூறியிருக்கிறார். கார் மாடல்களை, வாட்ஸ்ஆப்பில் அனுப்பினார். அதன்படி, 2022, டிச., 27ல், எட்டு லட்சம் ரூபாய்க்கு, பழைய கார் வாங்கி கொடுத்தார். அந்த காரை ஓட்டி பார்த்த போது, மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பழுது நீக்கிய பிறகே இயக்க முடியும் நிலையில் காணப்பட்டது. உடனடியாக, அரவிந்தை தொடர்பு கொண்ட போது, உரிய பதில் அளிக்காமல் பொறுப்பற்று பேசினார். ஒரு லட்சம் ரூபாய் செலவழித்து, காரை பழுது நீக்கிய பிறகுதான் சரவணனால் ஓட்ட முடிந்தது. பாதிக்கப்பட்ட சரவணன் இழப்பீடு கேட்டு, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், 'பழுதான காரை நல்ல நிலையில் இருப்பதாக கூறி விற்று, சேவை குறைபாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் செலவழித்த தொகை, ஒரு லட்சம் ரூபாயை திருப்பி வழங்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ