உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாட்டை சித்திரவதை செய்தவர் கைது

மாட்டை சித்திரவதை செய்தவர் கைது

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, நெம்பர் 10 முத்தூரில் மாட்டை சித்திரவதை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.கிணத்துக்கடவு, நம்பர் 10 முத்தூரை சேர்ந்தவர் வேலுச்சாமி, 41, கூலி தொழிலாளி. இவர், கோவை மத்திய சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலை ஆனார். இந்நிலையில் இவரது உறவினர் ரமேஷ்குமார் என்பவரின் வீட்டு மாட்டு கொட்டகையில் இரவு தங்கி இருந்தார்.இதில், இரவு நேரத்தில் மாட்டை துன்புறுத்தி சித்திரவதை செய்துள்ளார். இதுபற்றி, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், வேலுச்சாமி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை