உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு தேர்வில் வெற்றி பெறுவது எளிது

அரசு தேர்வில் வெற்றி பெறுவது எளிது

கோவை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பின் வாயிலாக, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக் காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.முதல் தாளுக்கான தேர்வு அக்., 24ம் தேதி, இரண்டாம் தாளுக்கான தேர்வு அக்., 14 முதல் 23க்குள் ஏதேனும் ஒரு தேதியில் பாட வரியாக நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 24ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 10ம் தேதி முதல், சனி மற்றும் ஞாயிறுகளில் நடக்கிறது.மேலும், மனுதாரர்கள், கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் அல்லது gmail.comஎன்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது 0422 - 2642388 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொாண்டு பயனடையுமாக, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை