உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வறட்சியால் காய்ந்த தென்னை மரங்கள் வெட்டி அகற்றம்

வறட்சியால் காய்ந்த தென்னை மரங்கள் வெட்டி அகற்றம்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, செல்லப்பகவுண்டன்புதுாரில் வறட்சி காரணமாக தென்னை மரங்களை விவசாயிகள் வெட்ட துவங்கியுள்ளனர்.கோடை காலத்தில், இந்தாண்டு பல இடங்களில் அதிகளவு வறட்சி நிலவுகிறது. இதனால், போதிய அளவு நீர் இன்றி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கிணத்துக்கடவு, வடசித்துார் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லப்பகவுண்டன்புதுாரில், விவசாயி சுப்ரமணியத்துக்கு சொந்தமான தோப்பில், வறட்சியின் காரணமாக, 300 தென்னை மரங்கள் காய்ந்து விட்டன. அந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வறட்சி ஏற்படும். கோடை மழை, தென்மேற்கு மழை பெய்ததும், வறட்சி நீங்கி விடும். ஆனால், தற்போது, முன்பு இருந்ததை விட, வறட்சி அதிகரித்துள்ளது. மற்றும் வெப்பமும் அதிக அளவு உள்ளது.எங்களுக்கு, 7.5 ஏக்கர் தோப்பு உள்ளது. இதில், 3 ஏக்கரில் இருந்த, 300 தென்னை மரங்களை தண்ணீர் பற்றாக்குறை, மரத்தின் வயது மற்றும் நோய் தாக்குதல் போன்ற காரணங்களுக்காக வெட்டப்பட்டுள்ளது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கோடை மழை பெய்யும் பட்சத்தில் மீண்டும் தென்னை விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ