ஒளிராத தெரு விளக்கு
பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள, தெரு விளக்கு ஒளிராமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அவ்வழியில் நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அப்பகுதி மக்கள் நலன் கருதி, ஊராட்சி நிர்வாகம் இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- சிந்து, பொள்ளாச்சி. குறுக்கு பட்டை தொல்லை
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், குறுக்கு பட்டை உயரமாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதுடன், அவ்வப்போது விபத்தும் நடந்து வருகிறது. எனவே, குறுக்கு பட்டைகள் எண்ணிக்கையை குறைக்க நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -மணிவாசகம், பொள்ளாச்சி. சேதமான சர்வீஸ் ரோடு
கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்வீஸ் ரோடு மீண்டும் சேதம் அடைய துவங்கியுள்ளது. இந்த ரோட்டில் ஆங்காங்கே குழி ஏற்பட்டுள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதை தேசிய நெடுஞ்சாலைத்துறை கவனித்து ரோட்டை சீரமைக்க வேண்டும்.- - சசி, கிணத்துக்கடவு. குப்பை குவிப்பு
உடுமலை ஸ்ரீ நகர் நகராட்சி பூங்கா முன், குப்பை குவிக்கப்பட்டு அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது. எனவே, தேங்கும் குப்பையை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கந்தசாமி, உடுமலை. சேதம் அடைந்த ரோடு
பொள்ளாச்சி, குஞ்சிபாளையம், 7வது வார்டில் உள்ள ரோட்டில் டிப்பர் லாரிகள் சென்றதால், ரோடு ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளது. தண்ணீர் குழாய்களும் உடைந்துள்ளதால், இவ்வழியில் வரும் டிப்பர் லாரியை மாற்றுப்பாதையில் அனுப்ப வேண்டும். உடைந்த குழாய் மற்றும் ரோட்டை ஊராட்சி நிர்வாகம் சீரமைப்பு செய்ய வேண்டும்.- - முத்துக்குமார், பொள்ளாச்சி. திருட்டு பயம்
உடுமலை, தாராபுரம் ரோடு வாசவி நகரில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. நீண்ட நாட்களாக தெருவிளக்குகள் பழுதாகி இருப்பதால் அப்பகுதி முழுவதும் இருளில் உள்ளது. மாலை நேரங்களில் பொதுமக்கள் வெளியில் சென்று வருவதற்கு சிரமப்படுகின்றனர். திருட்டு பயமும் அதிகரித்துள்ளது. ஐஸ்வர்யா நகரிலிருந்து தாராபுரம் ரோட்டிற்கு வரும் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.- வசந்தகுமார், உடுமலை. போக்குவரத்து பாதிப்பு
உடுமலை, காந்திநகர் பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி குழிகளில் வாகனங்களை விட்டு விபத்துக்குள்ளாகின்றனர். நடைபயிற்சி வரும் முதியவர்களும் தடுமாறி விழுகின்றனர். ரோடு தொடர்ந்து கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்து கொண்டே வருவதால் அப்பகுதி மக்களின் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.- ரேணுகாதேவி, உடுமலை. குறுகலான ரோடு
உடுமலையிலிருந்து ஜக்கம்பாளையம் செல்லும் ரோடு குறுகலாக உள்ளது. சரக்கு வாகனங்கள், கனரக லாரிகள் அவ்வழியாக அதிகம் செல்கின்றன. இவ்வாறு செல்லும்போது மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடமிருப்பதில்லை. மேலும், எதிரே வரும் வாகன ஓட்டுநர்கள் ஒதுங்கி நிற்பதற்கு திணறுகின்றனர்.- தனசேகர், மலையாண்டிகவுண்டனுார். குடிநீர் தொட்டி சேதம்
உடுமலை பெரியார் நகரில், நகராட்சி சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்து கிடக்கிறது. இதனால், தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, நகராட்சியினர் சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கார்த்திகேயன், உடுமலை. சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, கொழுமம் ரோடு பிரிவில் பிளாஸ்டிக் குப்பை, இறைச்சிக்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்லும்போது மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. இறைச்சி கழிவுகளும் இருப்பதால் தெருநாய்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாய்கள் ரோட்டின் குறுக்கே அடிக்கடி செல்வதால் விபத்துகளும் நடக்கிறது.- ராஜாராம், உடுமலை. புதர்களை அகற்றணும்
கிணத்துக்கடவு, தாமரைக்குளம் - பட்டணம் செல்லும் வழியில் ரோட்டின் இரண்டு பகுதியிலும் புதர்கள் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் தடுமாறிச்செல்கின்றனர். மேலும், ஓவர் டேக் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதை கவனித்து செடி மற்றும் புதர்களை அகற்ற வேண்டும்.- - நஞ்சுண்டசாமி, நல்லட்டிபாளையம்.