உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையில் பரவிய மணல் திட்டுகளால் ஆபத்து

சாலையில் பரவிய மணல் திட்டுகளால் ஆபத்து

மேட்டுப்பாளையம்;காரமடை அருகே அண்ணாநகரில், தேசிய நெடுஞ்சாலையில் சாலை முழுவதும் பரவி உள்ள மணல் திட்டுகளால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கோவை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், காரமடை அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் சாலை முழுவதும் ஆக்கிரமித்து, மணல் திட்டுகள் பரவி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, மழை நீரில் அடித்து வரப்பட்ட மணல் சாலையில் சேர்ந்துள்ளன.இந்த மணல் திட்டுகளை உடனே அகற்றி, விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், கோடை விடுமுறை என்பதால் ஊட்டிக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவை வழியாக ஊட்டி செல்வோர், இச்சாலை வழியாக தான் செல்கின்றனர். மணல் திட்டுக்கள் சாலை முழுவதும் பரவியுள்ளதால், இருசக்கர வாகனங்கள் செல்லும் போது சாலையில் வழுக்கி, கீழே விழுந்து சிறு, சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. கனரக வாகனங்கள் செல்லும் போது மணல் புழுதி வீசுகிறது. சிறிய ரக கார்கள் செல்லும் போது, பிரேக் அடித்தால் நிற்பதில்லை. நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த மணல் திட்டுகளை அகற்றி மக்களின் உயிர்களை காக்க வேண்டும், என்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை