உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் வரத்து சரிவு; ஏலத்தில் எகிறியது விலை

வாழைத்தார் வரத்து சரிவு; ஏலத்தில் எகிறியது விலை

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, சுற்றுப்பகுதியில் தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் பல்வேறு ரக வாழை பயிரிடப்பட்டுள்ளது. இதனால், ஆண்டு முழுவதும் மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து உள்ளது. தற்போது வாழைத்தார் வரத்து குறைந்து, விலை உயர்ந்து வருகிறது.இந்த வாரம் மார்க்கெட்டில், செவ்வாழை கிலோ - 70, நேந்திரன் - 50, ரஸ்தாளி - 40, கதளி - 55, பூவன் - 35, சாம்பராணி வகை - 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது.கடந்த வாரத்தை விட, செவ்வாழை கிலோ - 4, நேந்திரன் - 10, கதளி - 7, சாம்பராணி வகை - 5 ரூபாய் விலை அதிகரிதுள்ளது.இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், 'கிணத்துக்கடவு வட்டாரத்தில் வாழைத்தார் அறுவடை குறைந்துள்ளது. இதனால், தேவைக்கேற்ப வாழைத்தார் வரத்து இல்லை. இதற்கு மாற்றாக வெளிமாவட்டத்தில் இருந்து வாழைத்தார் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வாழைத்தார் விலை அதிகரித்துள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ