உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதியார் பல்கலையில் ஆர்ப்பாட்டம்

18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதியார் பல்கலையில் ஆர்ப்பாட்டம்

கோவை;பாரதியார் பல்கலையில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, பல்கலை அலுவலர் சங்கத் தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் பில்லப்பன், துணைத் தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், 'பல்கலை நிர்வாகப் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதால் பல்கலை பணிகள் பாதிக்கப்படுவதோடு, நிதியிழப்புகள் ஏற்படுகின்றன. பல்கலையில் கடந்த 6 மாதங்களாக ஆட்சிக்குழு, ஆட்சிப் பேரவைக் குழு கூட்டங்கள் நடத்தப்படாமல் உள்ளதால், பல முக்கிய கோப்புகள் தேக்கமடைந்துள்ளன.சில கோப்புகள் அவசரகதியில் கையொப்பம் இடப்பட்டு, நடவடிக்கை எடுப்பதால் எதிர்வரும் காலங்களில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பல்கலை பொறியாளர், நிதி அலுவலர் பணியிடத்தை விரைவில் நிரப்ப வேண்டும். பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதில், கற்றல் பணி அல்லாத ஊழியர்கள் 120க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை