உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சியில் அரசு நிதி முறைகேடு கிராம விரிவாக்க அலுவலர் பணி நீக்கம்?

ஊராட்சியில் அரசு நிதி முறைகேடு கிராம விரிவாக்க அலுவலர் பணி நீக்கம்?

பாலக்காடு;பாலக்காடு அருகே, நாகலச்சேரி ஊராட்சியில் நிதி இழப்பு ஏற்படுத்திய கிராம விரிவாக்க அலுவலரை பணி நீக்கம் செய்ய, முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்ட, நாகலச்சேரி ஊராட்சியில், கடந்த, 2018 - 22ம் ஆண்டில், கிராம விரிவாக்க அலுவலராக எர்ணாகுளம் மாவட்த்தை சேர்ந்த அமல்ராஜ் பணியாற்றினார்.இவர், 2022, ஏப்., 27ம் முதல் செப்., 28 வரையான காலகட்டத்தில், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில், 35 லட்சத்து, 37 ஆயிரத்து, 735 ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக உள்ளாட்சித் துறையின் தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், 18 சதவீத வட்டியான ரூ.10,24,778 உட்பட, ரூ.45,62,513 இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இவரது பணி காலத்தில், திட்டத்தை செயல்படுத்துவதில் பரவலாக முறைகேடுகள் நடந்து உள்ளன. சக ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள், பயனாளிகளின் நம்பிக்கையை பெற்ற பின், ஏமாற்றி பணம் பறித்து உள்ளார் என, விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இதையடுத்து, கடந்த 2023, மார்ச் மாதம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், அவரை பணி நீக்கம் செய்யவும், அரசுக்கு ஏற்படுத்திய நிதி இழப்பை, அவரிடம் வசூலிக்க வேண்டும் எனவும், கடந்த ஜூன் 27ம் தேதி, மாநில உள்ளாட்சித் துறை முதன்மை செயலர் சாரதா முரளிதரன், நாகலச்சேரி ஊராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி