உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பைக்கு தீ வைத்து எரிப்பு  வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி 

குப்பைக்கு தீ வைத்து எரிப்பு  வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி 

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, பணிக்கம்பட்டியில் குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பொள்ளாச்சி நகராட்சியையொட்டி அமைந்துள்ளது பணிக்கம்பட்டி. இந்த ஊராட்சியில், குப்பை முறையாக அள்ளப்படாமல் ஆங்காங்கே ரோட்டோரம் குவிந்து கிடக்கிறது. குப்பை தொட்டிகளில் அதிகளவு குப்பை தேங்கியுள்ளது. இதனால், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:பணிக்கம்பட்டி ஊராட்சியில், ரோட்டோரம் தேங்கி கிடக்கும் கழிவு முறையாக அகற்றப்படாமல் உள்ளதால், கொசு உற்பத்தி மையமாக மாறி வருகிறது. ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பையை அகற்ற கோரி கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.இந்நிலையில், ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பை உள்ளிட்ட கழிவுகளுக்கு தீ வைத்து எரிக்கப்படுகிறது. அதில், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளும் எரிந்து சுற்றுச்சூழல் பாதிக்கிறது. குப்பைகள் தேங்கி கிடப்பதால், சுகாதாரம் பாதிக்கப்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.மேலும், ரோட்டில் புகை சூழ்வதால், வாகன ஓட்டுநர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு கவனச்சிதறலால் விபத்துகள் ஏற்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி