உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட கால்பந்து லீக் ஜக்கோபி அசத்தல்

மாவட்ட கால்பந்து லீக் ஜக்கோபி அசத்தல்

கோவை;மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டியில் சூர்யபாரதி ஹாட்ரிக் கோல் அடிக்க, ஜக்கோபி அணி அசத்தல் வெற்றி பெற்றது. கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் 'பி' டிவிஷன் லீக் போட்டிகள், அவிநாசி ரோடு சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை நடந்த போட்டியில், ஜக்கோபி கால்பந்து கிளப் மற்றும் மதுக்கரை யுனைடெட் கால்பந்து கிளப் அணிகள் போட்டியிட்டன.ஜக்கோபி அணியின் சூர்யபாரதி (25, 28, 35 நிமிடங்களில்) ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து, கவுதம் 66வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். மதுக்கரை யுனைடெட் அணிக்கு அஷ்வின் குமார் ஆறுதல் கோல் அடிக்க ஆட்ட நேர முடிவில் ஜக்கோபி அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை