மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
3 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
3 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
3 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
3 hour(s) ago
சூலுார்;சூலுார் தாலுகா மருந்து வணிகர்கள் சங்க மூன்றாம் ஆண்டு விழா சூலுாரில் நடந்தது. தலைவர் கனகசபாபதி தலைமை வகித்தார். செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். சூலுார் சரக மருந்துகள் ஆய்வாளர் பிரகாஷ் பேசியதாவது: டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்க கூடாது. டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, களைப்பு, வாந்தி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் டெங்கு காய்ச்சலாக இருக்கலாம். அதனால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல மக்களிடம் வலியுறுத்த வேண்டும். பதிவு பெற்ற டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல் இங்கு மருந்துகள் விற்பனை செய்யப்படாது என, கடைகளின் முன் அறிவிப்பு செய்ய வேண்டும். அனைவரும் அரசின் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மாவட்ட தலைவர் செல்வம், செயலாளர் திருநாவுக்கரசு பொருளாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago