உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதுசு புதுசா வரும் குடிநீர் பாட்டில்கள் :துறை அதிகாரிகள் ஆய்வு அவசியம்

புதுசு புதுசா வரும் குடிநீர் பாட்டில்கள் :துறை அதிகாரிகள் ஆய்வு அவசியம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், சரியான தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி அச்சிடப்படாத நிலையில், குடிநீர் கேன்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.கோடை துவங்கியுள்ளதால், குடிநீர் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான முறையில் குடிநீர் பாட்டில்கள் மற்றும் குடிநீர் கேன்கள் கிடைப்பதை உணவுப் பாதுகாப்பு துறையினர் உறுதிப்படுத்த வேண்டும்.இந்நிலையில், பொள்ளாச்சி நகரில், சமீபகாலமாக, 20 லிட்டர் கேன், ஒரு லிட்டர் கேன், இரண்டு லிட்டர் கேன், 250மி.லிட்டர் பிளாஸ்டிக் பாக்கெட் என, பல்வேறு அளவுகளில், குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.இதனை சாதமாக்கிக் கொண்டு, சிலர் சரியான தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி அச்சிடாமல் குடிநீர் கேன் விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதனை பருகுவோருக்கு சளி, காய்ச்சல் ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது:நீண்ட நாட்கள் பயன்படுத்தப்பட்ட கேன்களை பயன்படுத்தாமல் இருப்பதுடன், கேன்கள் அழுக்கின்றி தெளிவாக உள்ளதா என்பதை உணவுப் பாதுகாப்பு துறையினர் உறுதி செய்ய வேண்டும்.குறிப்பாக, குடிநீர் தயாரிப்பு ஆலைகளில் சரிவர உணவு பாதுகாப்பு சட்டம் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.புதிது புதிதாக நிறுவனங்களின் குடிநீர் விற்பனை புற்றீசல் போன்று அதிகரித்து காணப்படுகிறது. போலியான, அனுமதி பெறாத நிறுவனங்களின், குடிநீரைக் குடிப்பதால், மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து சுகாதார அதிகாரிகள் கண்டு கொள்வதும் கிடையாது.மக்கள் நலன் கருதி, முறையான அனுமதி பெற்ற மற்றும் தரச்சான்று பெற்ற நிறுவனங்கள் மட்டும் குடிநீர் சப்ளை செய்ய அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை