உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தர்ணா நடத்திய மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள்

தர்ணா நடத்திய மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள்

கோவை;கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை கிளைகள் சார்பில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள், குடும்பத்துடன் நேற்று தர்ணா நடத்தினர்.பல ஆண்டுகளாக சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்க வேண்டும், பிரிவுக்கு இரண்டு பேரை, ஒப்பந்ததாரர் வாயிலாக நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு, வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நேரடியாக நியமித்து, தினக்கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்ணா போராட்டம் நடந்தது.கோவை டாடாபாத் மத்திய அலுவலகம் முன் நடந்த இந்த தர்ணாவுக்கு, தெற்கு கிளை தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர் கிளை தலைவர் மதுசூதனன், மாநில செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி