உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போராட்டங்களை தடை செய்ய இ.ம.க., வலியுறுத்தல்

போராட்டங்களை தடை செய்ய இ.ம.க., வலியுறுத்தல்

கோவை;அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கோர்ட் வளாகங்களில் நடக்கும் போராட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று இ.ம.க., நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.இது குறித்து அர்ஜுன் சம்பத் அறிக்கை: தி.மு.க., கம்யூ., வக்கீல்கள் கோர்ட் வளாகங்களிலேயே அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சட்டவிரோத போராட்டங்களை நடத்துகின்றனர். வெறுப்பு பிரசாரத்தையும் மேற்கொள்கின்றனர்.புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த பிறகு அதை எதிர்க்க சட்டபூர்வமான முயற்சி மேற்கொள்ளலாம். ஆனால் கோர்ட் ஊழியர்களுக்கும், மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டங்களை திருத்தி காலத்துக்கு தக்கபடி மாற்றங்கள் செய்து இச்சட்டங்கள் லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் நிறைவேற்றி அதற்கு முன்பாக கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பதிவு செய்து இச்சட்டம் வடிவமைக்கப்பட்டது.அப்பொழுதே இதற்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் கூட சட்டமாக்கி ஜனாதிபதி கையெழுத்திட்டு உத்தரவு பிறப்பித்த பிறகு கோர்ட்டிலும் தடை கோரி இண்டியா கூட்டணியினர் வழக்கு தொடுத்தனர். கோர்ட்டிலும் தடை விதிக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது.இத்தனைக்கு பிறகும் போராட்டம் நடத்துவது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்றாடம் நீதிமன்றத்திற்கு வருகை தரும் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடைபெறும் இப்போராட்டங்களை கோர்ட் தாமாக முன்வந்து தடை செய்ய வேண்டும்.இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை