உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மயங்கி விழுந்த மயில்: வனத்துறையிடம் ஒப்படைப்பு

மயங்கி விழுந்த மயில்: வனத்துறையிடம் ஒப்படைப்பு

பெ.நா.பாளையம்:துடியலூர் அருகே மயங்கி விழுந்த மயிலை, பொதுமக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் மயில்கள் அதிகளவில் இருக்கும்.இந்த நிலையில் துடியலூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே மயில் ஒன்று மயங்கிய நிலையில் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.மயங்கி கிடந்த மயிலுக்கு வனத்துறையினர் தண்ணீர் கொடுத்தனர். சிறிது நேரத்தில் மயில் மயக்கத்தில் இருந்து மீண்டது. உடனடியாக மடத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு மயில் கொண்டு செல்லப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டது.இது குறித்து, வனத்துறையினர் கூறுகையில், 'மயங்கி விழுந்த மயிலுக்கு ஒரு வயது இருக்கும். பெண் மயில். தோட்டங்களில் உணவு தேடி வரும்போது பூச்சிக்கொல்லி மருந்தை சில சமயங்களில் சாப்பிட்டு விடுவதால், இது போன்று வாயில் ரத்தம் வந்து மயங்கி விழுந்து விடுகிறது.சரியான நேரத்தில் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதால், மயில் வேகமாக குணமடைந்து வருகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்