உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன விபத்தில் விவசாயி காயம்

வாகன விபத்தில் விவசாயி காயம்

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார், 40, விவசாயி. இவர் கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் செக்போஸ்ட் அருகே பைக்கில் சென்ற போது, இவரின் முன் கேரளாவை சேர்ந்த சக்திவேல், 43, என்பவர் டிப்பர் லாரியில் சென்றுள்ளார்.அப்போது, எதிர்பாராதவிதமாக எந்த சைகையும் இன்றி, திடீரென டிப்பர் லாரி பிரேக் பிடித்து நிறுத்தப்பட்டது. இதனால், நிலை தடுமாறிய செல்வகுமார், லாரியில் மோதி விபத்துக்குள்ளானார். படுகாயமடைந்த செல்வகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை