உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலக்காட்டில் விவசாயி தற்கொலை

பாலக்காட்டில் விவசாயி தற்கொலை

பாலக்காடு;பாலக்காடு அருகே விவசாயி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரா இடியம்பொற்றை பகுதியைச்சேர்ந்தவர் சோமன், 61; விவசாயி. இவர் சொந்த இடத்திலும், நிலம் குத்தகைக்கு எடுத்தும், நெல் சாகுபடி செய்து வந்தார். விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்து வந்த இவருக்கு, நிதி பிரச்னை இருந்து வந்தது.இந்நிலையில் இவர் நேற்று காலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த நெம்மாரா போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது இவரது உடலின் அருகில் இருந்து கடிதம் கிடைத்தது.அதில், விவசாயம் அழிந்து விட்டதால், வங்கிக்கடனை திருப்பிச்செலுத்த முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி