உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரதான கால்வாயில் பராமரிப்பில்லாத பாலம்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

பிரதான கால்வாயில் பராமரிப்பில்லாத பாலம்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, வேட்டைக்காரன்புதுார் பிரதான கால்வாய் பகுதியில் உள்ள பராமரிப்பில்லாத பாலத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நீர் வினியோகம் செய்யப்படுகிறது. புதிய ஆயக்கட்டு பாசனத்தில், பொள்ளாச்சி, சேத்துமடை, ஊட்டுக்கால்வாய், வேட்டைக்காரன்புதுார் கால்வாய்கள் வாயிலாக நீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், வேட்டைக்காரன்புதுார் பிரதான கால்வாய், பல ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. கீழ் பகுதியில் மழைநீர் செல்லும் பள்ளம் உள்ளதால் உயர்த்தி கால்வாய் கட்டப்பட்டு பாலம் போன்று அமைக்கப்பட்டது. தற்போது, போதிய பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.விவசாயிகள் கூறியதாவது:வேட்டைக்காரன்புதுார் பிரதான கால்வாய், 6.4 கி.மீ., துாரத்தில் பாலம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. கால்வாயில் கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும், செடிகளும் வளர்ந்துள்ளன.ஆங்காங்கே பாலத்தின் கீழ் பகுதி விரிசல் விட்டது போன்றுள்ளது. இதை சீரமைக்காவிட்டால், தண்ணீர் வரும் காலத்தில் பாலம் சேதமடைந்து நீர் விரயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.பி.ஏ.பி., அதிகாரிகள் கூறுகையில், 'வேட்டைக்காரன்புதுார் பிரதான கால்வாய் 17.4 கி.மீ., மற்றும், 50 கி.மீ., துாரம் உள்ள கிளை கால்வாய்கள் சீரமைப்பு பணிகள், 20 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படுகின்றன.தற்போது, பிரதான கால்வாயில், ஐந்தரை கி.மீ., துாரம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாலம் சேதம் உள்ளிட்ட அனைத்தும் சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை