| ADDED : ஜூன் 06, 2024 11:21 PM
அன்னுார்:அன்னுார் அருகே சொக்கம்பாளையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, ஒரு குரங்கு அப்பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து, தென்னை மரங்களில் உள்ள இளநீர், தேங்காய் ஆகியவற்றை கடித்து சேதம் செய்து வருகின்றன.ஆறுச்சாமி மற்றும் அருகில் உள்ள தோட்டத்தில் ஒவ்வொரு தென்னை மரங்களின் அடியில், குரங்கு குடித்த நான்கைந்து இளநீர் கிடக்கிறது. மரத்தின் மீது குரங்கு அமர்ந்து, இளநீரை பறித்து, பற்களால் மட்டையை உரித்து இளநீரை குடித்து வருகிறது. இந்த குரங்கை விரட்ட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். அன்னுார் மக்கள் நல சமூக ஆர்வலர் சாந்த மூர்த்தி, கூறுகையில், ''வனத்துறையினர் குரங்கை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர் ஆனால் ஒரு வாரமாக யாரும் வராததால், குரங்கின் தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே உடனடியாக குரங்கை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.