| ADDED : ஜூலை 01, 2024 01:33 AM
கோவை;மகன் இறப்புக்கு காரணம் எனக்கூறி, கத்தியால் காதை கிழித்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை சேர்ந்தவர் சண்முகம்,38. இவர் சித்தாபுதுார் ஹரிபுரத்தில் தங்கி, நான்கு சக்கர வாடகை வாகனம் ஓட்டி வருகிறார். இவரது மாமனார் கோவிந்தராஜ்,56, அருகே வசிக்கிறார். பல்லடத்தில் வசித்து வந்த கோவிந்தாரஜின் மூத்த மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.துக்கம் தாங்காது கோவிந்தராஜ் தினமும் மது குடிப்பதுடன், குடும்பத்தினருடன் சண்டையிட்டும் வந்துள்ளார். கடந்த, 28ம் தேதி இரவு சண்முகம் மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தனர்.குடிபோதையில் இருந்த கோவிந்தராஜ், அங்கு சென்று, 'நீதான் என் மகனின் இறப்புக்கு காரணம்' எனக்கூறி சண்முகத்தை, இரும்பு கம்பியால் தாக்க முயன்றுள்ளார். தடுக்க முயன்ற போது கத்தியால் சண் முகத்தின் இடது காதில் காயப்படுத்தியுள்ளார். சத்தம் கேட்டு வந்த உறவினர்கள், கோவிந்தராஜை தடுத்து அழைத்துச்சென்றனர். சண்முகம் காட்டூர் போலீசாரிடம் அளித்த புகாரின்பேரில், கோவிந்தராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.