உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர் ஓட்டல்களில் நியமிக்க எதிர்பார்ப்பு

உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர் ஓட்டல்களில் நியமிக்க எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், உணவுப்பாதுகாப்பு துறையால், உணவுப்பொருட்களின் தரம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இருப்பினும், ஓட்டல்கள் சிலவற்றில், உணவுப் பாதுகாப்பு விதிகள் சரிவர பின்பற்றப்படுவது கிடையாது. பல ஓட்டல்களில், விதிகளுக்கு மாறாக, உணவு தயாரிக்கப்படும் இடம், சமையலறை அமைக்கப்படுகிறது.சமையலறை பணியாளர்கள் மற்றும் உணவு பரிமாறுபவர்கள், கையுறை, தலையுறை அணிந்து, சுத்தமான சீருடையில் இருப்பது கிடையாது. இதனால், பணம் செலவிட்டும், தரமான உணவு கிடைக்காமல், வாடிக்கையாளர்கள் பாதிப்பு அடைகின்றனர். எனவே, ஊழியர்களைக்கண்காணித்து அறிவுறுத்தும் வகையில், அந்தந்த உணவு தயாரிப்பு நிறுவனங்களிலேயே, உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர் பணியிடத்தை உருவாக்க வேண்டும். இதனை, உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணிக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை