உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 20வது முறையாக இ.இ.பி.சி., விருது பெற்ற சி.ஆர்.ஐ., பம்ப்!

20வது முறையாக இ.இ.பி.சி., விருது பெற்ற சி.ஆர்.ஐ., பம்ப்!

கோவை : பொறியியல் துறை ஏற்றுமதியில், தொடர்ந்து முன்னணி வகித்து வரும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம், பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் கவுரவமிக்க இ.இ.பி.சி., விருதை, 20வது முறையாக வென்றுள்ளது.புதுச்சேரியில் நடந்த, தென் மண்டல அளவிலான 45வது மற்றும் 46வது பொறியியல் ஏற்றுமதி விருது வழங்கும் விழாவில், இந்த விருது வழங்கப்பட்டது.சர்வதேச சந்தையில் இந்தியாவின் பெருமையை உணர்த்தும் வகையில், சிறப்பாக செயல்படுவதற்காக இந்த விருது, சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் தொழில் வர்த்தக துறை அமைச்சகத்தின் வர்த்தக துறை இணை செயலாளர் விமல் ஆனந்த் விருதை வழங்கினார். சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தை பிரிவு அதிகாரி பூபதி, விருதை பெற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை