உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முன்னாள் எம்.பி., கோர்ட்டில் ஆஜர்

முன்னாள் எம்.பி., கோர்ட்டில் ஆஜர்

கோவை:அ.தி.முக., பொது செயலாளர் மீது, முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த அவதுாறு வழக்கில், நேற்று கோர்ட்டில் ஆஜரானார்.கோவையை சேர்ந்தவர் கே.சி.பழனிசாமி. அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,யான இவர் குறித்து, அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பேட்டி அளித்த போது, அவதுாறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறி, கோவை ஜே.எம்:1, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுவை, விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் கோபால கிருஷ்ணன், புகார்தாரரிடம் சாட்சியம் பெற வழக்கை நேற்றைக்கு ஒத்திவைத்து இருந்தார். வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கே.சி.பழனிசாமி கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, ஆக., 1க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை