உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயிற்சி நினைவுகளை பகிர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரிகள்

பயிற்சி நினைவுகளை பகிர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரிகள்

கோவை: கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில், 1984ம் ஆண்டு பயிற்சி முடித்தவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் (பி.ஆர்.எஸ்.,) 1984ம் ஆண்டு என, 40 ஆண்டுகளுக்கு முன் பயிற்சி பெற்று, தற்போது ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள போலீசாரின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி என, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 123 பேர் பங்கேற்று மலரும் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். இதில், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., பதவிகள் வகித்து பலர் ஓய்வு பெற்றுள்ளனர். கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நிறைவில், அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.1984ம் ஆண்டு பயிற்சி முடித்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பாஸ்கர், நீலகிரி மாவட்ட செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

nagendhiran
ஆக 03, 2024 18:04

அறுத்து தள்ளீட்டீங்க இதில் இது வேறவா?


nagendhiran
ஆக 03, 2024 18:04

அறுத்து தள்ளீட்டீங்க இதில் இது வேறவா?


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை