உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேவா பாரதி சார்பில் இலவச இயற்கை மருத்துவ முகாம்

சேவா பாரதி சார்பில் இலவச இயற்கை மருத்துவ முகாம்

கோவை;சேவா பாரதி சார்பில் வரும், 7ம் தேதி நடக்கும் இலவச இயற்கை மருத்துவ முகாமில் பங்கேற்க முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.சேவா பாரதி சார்பில் ஆர்.எஸ்., புரம், கிழக்கு வெங்கிடசாமி ரோட்டில் உள்ள சத்குரு சேவாஸ்ரமத்தில் வரும், 7ம் தேதி இலவச இயற்கை மருத்துவ முகாம் நடக்கிறது.இம்முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதயம் சார்ந்த நோய்கள், சினைப்பை கட்டி, உடல் பருமன், நரம்புதளர்ச்சி என அனைத்து விதமான நோய்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.ஜெ.எஸ்.எஸ்., இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள், நோயாளிகளுக்கு ஏற்ற உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்குகின்றனர்.அனுமதி இலவசம். அதேசமயம் முன்பதிவு அவசியம் என்பதால், 63803 73956, 99447 11983, 90033 43514 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என, சேவா பாரதி மாநில தலைவர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ