உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராமப்புற பெண்களுக்கு சுயதொழில் இலவச பயிற்சி

கிராமப்புற பெண்களுக்கு சுயதொழில் இலவச பயிற்சி

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் கிராமப்புற பெண்களுக்கு சுய தொழில் இலவச பயிற்சி துவக்க விழா நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் கோவை கேலக்ஸி ரோட்டரி சங்கம் இணைந்து, பெண்களுக்கான சுய தொழில் இலவச பயிற்சி முகாம் நடத்துகிறது. தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி துவக்க விழா நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் பழனியப்பன் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தனியார் துறை வேலைவாய்ப்புகள், எவ்வாறு சுயமாக தொழில் செய்து முன்னேற்றம் அடைவது என்பது குறித்து விளக்கம் தரப்பட்டன. ரோட்டரி சங்க துணை ஆளுநர் ராமசாமி, 'பெண்களும், சுய தொழிலும்' என்ற தலைப்பில் தொழிலில் வெற்றி பெற்ற பெண்களின் வாழ்க்கையை கூறி விளக்கம் அளித்தார். பெண் தொழில் முனைவோர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் கடன் உதவியை பற்றி விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி