உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு போக்குவரத்து கழக ஊழியர் பொறியாளர் தற்காலிக பணி நீக்கம்

அரசு போக்குவரத்து கழக ஊழியர் பொறியாளர் தற்காலிக பணி நீக்கம்

கோவை;கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக ஊழியர் மற்றும் உதவி பொறியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.கோவையில் இருந்து, மேட்டுப்பாளையத்துக்கு நேற்று சென்ற அரசு பஸ்சில், 'கியர்' கம்பி மிகவும் பழுதான நிலையில் இருந்தது தொடர்பாக, சமூக ஊடகத்தில் வெளியான வீடியோ வைரல் ஆனது.போக்குவரத்து கழக அதிகாரிகள், அந்த பஸ்சை ஆய்வு செய்த போது, சரியாக பழுது பார்க்காமல் பஸ்சை அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து, கோவை கோட்ட போக்குவரத்து கழக தொழில் நுட்ப பணியாளர் மற்றும் உதவி பொறியாளர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். பஸ்சின் கியர் கம்பி பழுது நீக்கப்பட்டு மீண்டும் அந்த பஸ் இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்