உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேரன் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

சேரன் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

கோவை;தெலுங்குப்பாளையம் பகுதியில் உள்ள, சேரன் கல்வி குழுமத்தில், 28வது பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் டாக்டர் மீனா குமாரி, டாக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் டாக்டர் ஆனந்த் விழாவிற்கு தலைமை வகித்தனர்.பேட்டர்சன் கேன்சர் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் டாக்டர் விஜயராகவன் மற்றும் சன் கேன்சர் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் டாக்டர் உஷா ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தனர்.விழாவில், 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் வழங்கப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள், வெள்ளிப் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை