| ADDED : ஜூலை 25, 2024 10:24 PM
வால்பாறை : வால்பாறையில், ரோடு சீரமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.வால்பாறை நகர் பகுதிக்கு, 8 கி.மீ., தொலைவில் உள்ள அக்காமலை தடுப்பணையில் இருந்து, நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கருமலை பேக்டரி முதல் தடுப்பணை வரை, ஒரு கி.மீ., துாரம் உள்ள ரோடு நகராட்சி சார்பில், 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்க, டெண்டர் விடப்பட்டது.இதனையடுத்து, ரோட்டில் ஜல்லிக்கற்கள் மட்டுமே போடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் நகராட்சி வாகனங்கள் செல்ல முடியாமலும், எஸ்டேட் தொழிலாளர்கள் நடந்து செல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வால்பாறையில் தற்போது மழை பெய்வதால் ரோடு, சீரமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. மழை பொழிவு குறைந்ததும் ரோடு சீரமைக்கும் பணி உடனடியாக துவங்கப்படும்,' என்றனர்.