|  ADDED : ஏப் 28, 2024 01:54 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
பாரம்பரிய விளையாட்டான மல்லர்கம்பத்தை, கல்லுாரி விளையாட்டில் சேர்க்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். சிலம்பம் போலவே பாரம்பரிய கலைகளுள் ஒன்று தான் மல்லர்கம்பம். சங்ககால மன்னர்கள் காலத்தில் தோன்றி, தொன்று தொட்டு விளையாடப்பட்டு வந்தாலும், இந்த விளையாட்டு பல நகரங்களில் அழியும் நிலையில் உள்ளது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில், மல்லர்கம்பம் விளையாட்டு இடம் பெற்றிருந்தாலும், பல கல்லுாரிகளில் இந்த விளையாட்டை பற்றிய விழிப்புணர்வு இல்லை.பாரதியார் பல்கலை விளையாட்டு போட்டிகளிலும் மல்லர்கம்பம் இல்லை. பள்ளிப்பருவத்தில் இந்த விளையாட்டை கற்றுக்கொண்ட மாணவர்கள் பலர், தற்போது கல்லுாரிகளில் பயின்று வருகின்றனர்.இதனால், கோவையில் பல்வேறு கல்லுாரிகளில் படிக்கும் மல்லர்கம்பம் விளையாடும் மாணவர்கள் இவ்விளையாட்டை, கல்லுாரி விளையாட்டுகளில் சேர்க்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.