| ADDED : ஏப் 27, 2024 11:24 PM
கோவை:கோவையில் பிரைட் ஈவென்ட்ஸ் சார்பில், வீடு மற்றும் மனை கண்காட்சி, அவிநாசி ரோடு சுகுணா திருமண மண்டபத்தில் துவங்கியது.இந்தியன் வங்கியின் கோவை மண்டல மேலாளர் ஸ்ரீனிவாசன் ரிப்பன் வெட்டி, கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில், 50க்கும் மேற்பட்ட பல்வேறு வீடு மற்றும் மனை, அபார்ட்மென்ட் ஆகிய சேவைகள் வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.பிரைட் ஈவென்ட்ஸ் நிறுவன மேலாளர் இந்துமதி, மொறைஸ் சிட்டி மேலாளர் சுராஜ் கண்ணா, ஏ.ஆர்.,கன்ஸ்ட்ரஷன்ஸ் அண்ட் பிசினஸ் மாஸ்டர் கம்யூனியன் மேலாளர் அருண் விஜய், யூனிகோ ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் கோவை தலைமை மேலாளர் பூபாலன், அடிசியா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைமை விற்பனை மேலாளர் பிரவீன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். பொதுமக்கள், கண்காட்சியை காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை இலவசமாக பார்வையிடலாம்.