உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு என்னவொரு தாராள மனசு!

ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு என்னவொரு தாராள மனசு!

கனமழை காரணமாக சேதமடைந்த சாலையை சரி செய்த, ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு பாராட்டுகள் குவிகின்றன. கோவையில் கடந்த சில நாட்களாக, தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் ஓடியதில், பல்வேறு பகுதிகளில் தார்ச்சாலைகள் பெயர்ந்து, சிறிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ரெட்பீல்ட்ஸ், காமராஜர் சாலையில் தார் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.இதனை அறிந்த ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., சுவாதி, போலீசார் கார்த்தி, உதயகுமார் ஆகியோர், கான்கிரீட் கலவை போட்டு சாலையை சீரமைத்தனர். போக்குவரத்து போலீசாரின் இந்த செயலை, வாகன ஓட்டிகள் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை