சம்மர் லீவ் விட்டாச்சு... இனி குழந்தைகளின் குதூகலத்துக்கு அளவிருக்காது. அடிக்கிற வெயில்லயும் அட்டகாசம் பண்ணும் நம்ம குழந்தைகளை, பத்திரமா பாத்துக்கறது கண்டிப்பா ஒவ்வொரு பெற்றோருக்கும் சவாலான காரியம்தான் என்கிறார், குழந்தைகள் நல மருத்துவர் ஜோதிலட்சுமி.அவர் கூறிய சில 'டிப்ஸ்' இதோ!* வெளியில் சென்று விளையாடும் குழந்தைகளை, நாம் தடுக்கக் கூடாது. இதமான காலை மற்றும் மாலை வேளைகளில், வெளியில் விளையாட வைக்கலாம். * அவுட்டோர் கேம்சில் ஈடுபடும் குழந்தைகளுக்கு தண்ணீர் பாட்டில், இளநீர், மோர், தர்பூசணி, முலாம்பழம் போன்ற ஜூஸ் வகைகளை கொடுத்து அனுப்பலாம். இது அவர்களுக்கு, நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவும்.* வெயில் அதிகமாக இருக்கும் நேரமான காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை கேரம், கிராப்ட் வொர்க், செஸ், டிராயிங் போன்றவற்றில் ஈடுபடுத்தலாம்.* டெனிம், ஜீன்ஸ், புல் ஹேண்ட் சர்ட், பேன்ட்ஸ் வகைகளைத் தவிர்த்து, நல்ல காட்டன் ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவிக்கலாம்.* குடை, தொப்பி போன்றவற்றை பயன்படுத்துவதால், நேரடி வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.* விளையாடி விட்டு வீட்டுக்குத் திரும்பும் குழந்தைகளுக்கு, புத்துணர்ச்சி தரும் ஒரு குளியலைத் தரலாம். வெயில் காலத்தில் இரண்டு, மூன்று முறை கூட குளிக்க வைக்கலாம். * காரம் மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை, குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.* நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை கட்டாயம் சேர்க்க வேண்டும். தர்பூசணி, நுங்கு, இளநீர், காய்கறி, பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.அவுட்டோர் கேம்சில் ஈடுபடும் குழந்தைகளுக்கு தண்ணீர் பாட்டில், இளநீர், மோர், தர்பூசணி, முலாம்பழம் போன்ற ஜூஸ் வகைகளை கொடுத்து அனுப்பலாம். இது அவர்களுக்கு, நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவும்.