பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் நடந்த, ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான இறகு பந்து போட்டியில், மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.பொள்ளாச்சி திஷா பள்ளியில், ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான இறகுபந்து போட்டி கடந்த, இரண்டு நாட்களாக நடந்தது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த, 31 பள்ளிகளில் இருந்து, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இப்போட்டிகளை, பெங்களூரூ பிரகாஷ் படுகோன் அகாடமி மற்றும் திஷா பள்ளியும் நடத்தின. போட்டிகள், 14, 17 மற்றும் 19 வயதினருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் நடைபெற்றன.14 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில், என்.பி.எஸ்., இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஸ்வேதா, ஷிவானி ப்ரேமி முதல் மற்றும் மூன்றாமிடத்தை பெற்றனர். இஷா பள்ளியை சேர்ந்த ஓவிபட்டில் இரண்டாமிடம் பெற்றார்.17 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில், பாரதி பள்ளியைச்சேர்ந்த மாணவி வினோஷ்கா முதலிடமும், கவுமாரா சுசீலா பள்ளி மாணவி ஷசென்கா பரஷ் இரண்டாமிடமும், பொள்ளாச்சி திஷா பள்ளி மாணவி இனியா மூன்றாமிடமும் பெற்றனர். 19 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில், லட்சுமி பள்ளி மாணவி காவ்யா முதலிடமும், ஜீவானா பள்ளி மாணவியர் ஜோன்னா எச் டேவிட், தேவி ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாமிடமும் பெற்றனர். இரட்டையர் பிரிவு
14 வயதுக்கு உட்பட்ட இரட்டையர் பிரிவில், என்.பி.எஸ்., இன்டர்நேஷனல் பள்ளி மாணவி சமிக் ஷா, ஷிவானா பிரேமி முதலிடத்தையும், அபாகஸ் மாண்டிசேரி பள்ளி மாணவியர் அனக்கா ஹரிஷ் பல்லவா, ஜெய கீர்த்திராம் இரண்டாமிடமும் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட பரிவில், பாரதி பள்ளியை சேர்ந்த மாணவியர் வைஷ்ணவி, வினோஸ்கா முதலிடத்தையும், ஜீவானா பள்ளியை சேர்ந்த மாணவியர் ஹன்சிகா, யாழினி இரண்டாமிடமும் பெற்றனர். 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில், லட்சுமி பள்ளி மாணவியர் காவ்யா மற்றும் மிர்தினி முதலிடமும், கவுமாரா சுசீலா பள்ளி மாணவியர் ஜோஷிதா, சாஷ்மிதா இரண்டாமிடமும் பெற்றனர். திஷா பள்ளியின் நிர்வாக இயக்குனர் செந்தில் சீனிவாசன், பொது மேலாளர் கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் உமாரமணன் ஆகியோர், வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினர்.