உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பத்தாவது வார்டில் மக்கள் பொத்... பொத்! மழையால் சேறான சாலைகளில் வழுக்கி விபத்து

பத்தாவது வார்டில் மக்கள் பொத்... பொத்! மழையால் சேறான சாலைகளில் வழுக்கி விபத்து

1. வேகத்தடை வேண்டும்

காந்திபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு, ஐந்தாவது வீதி சந்திப்பில் தனியார் பள்ளி அருகே அதிவேகத்தில் வரும் வாகனங்களால், சாலையை கடக்க முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். சாலை நடுவே சாக்கடை சிலேப்பும் உடைந்த நிலையில் உள்ளது. விபத்து நடக்க வாய்ப்புள்ளதால், வேகத்தடை அமைத்து, சிலேப்பை மாற்ற வேண்டும்.- கதிர்வேல், காந்திபுரம்.

2. பள்ளி முன் ஓடும் சாக்கடை

சுந்தராபுரம், கஸ்துாரி நகர், பாரதிய வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி எதிரே, பாதாள சாக்கடை உடைந்து, சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. சுகாதாரமற்ற சூழலால், குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. விரைந்து உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- பிரகதி, சுந்தராபுரம்.

3. விழும் நிலையில் மரம்

வடவள்ளி, ஹாப்பி கார்டன், மவுதி மருத்துவமனை அருகே, பெரிய மரத்தின் அடிப்பகுதி கரையான் அரித்து, ஆபத்தன நிலையில் உள்ளது. மரத்தின் காய்ந்த கிளைகள் அவ்வப்போது முறிந்து சாலையில் விழுகிறது. விழும் நிலையில் உள்ள மரத்தை, பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.- சண்முகம், வடவள்ளி.

4. மூச்சை முட்டும் துர்நாற்றம்

கோவை மாநகராட்சி, 41வது வார்டு, கருப்பராயன் கோவில் பகுதியில், சாக்கடை கால்வாய் சரிவர துார்வாரவில்லை. கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகம் உள்ளது. கால்வாயை சீரான இடைவெளியில் துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தமிழ் ரவி, 41வது வார்டு.

5. தெருவிளக்கு பழுது

போத்தனுார், 99வது வார்டு, மேட்டுத்தோட்டம், காந்தி நகரில், 'எஸ்பி - 32, பி -9' என்ற எண் கொண்ட கம்பத்தில், பல மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால், இரவில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இரவு, 7:00 மணிக்கு மேல் வெளியே செல்ல முடியவில்லை.- சியாமளா, போத்தனுார்.

6. வழுக்கும் சாலை

ஒத்தக்கால்மண்டபம், 10வது வார்டு, பி.வி.எம்., எஸ்.பி., கார்டன் பகுதியில் இதுவரை தார்சாலை வசதி அமைக்கவில்லை. தார் சாலை அமைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையில்லை. மழைக்காலங்களில் சேறும், சகதியுமான சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் தடுமாறி விழுகின்றனர்.- வெங்கட், ஒத்தக்கால்மண்டபம்.

7. புதர்மண்டிய பூங்கா

பி.என்.புதுார், தில்லை நகர், பிரதான சாலையில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. பூங்கா முழுவதும் குப்பை நிறைந்து, புதர்மண்டி காணப்படுகிறது. விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்துள்ளது. - பாலாஜி, பி.என்.புதுார்.

8. சீரமைக்காத ரோடு

சுண்டாக்காமுத்துார், குறிஞ்சி நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டது. பணிகள் முடிந்தும் குழிகளை சரியாக மூடி, சாலையை சீரமைக்கவில்லை. மண் மேடுகளாகவும், குழிகளாகவும் இருக்கும் சாலையால், குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.- தனலட்சுமி, குறிஞ்சி நகர்.

நாய்களால் அச்சுறுத்தல்

கோவை மாநகராட்சி, 43வது வார்டு, மணியம் காளியப்பா தெருவில், 10க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோர், பைக்கில் செல்வோரை நாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன. குழந்தைகள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர்.- ராசப்பன், மணியம்காளியப்பா தெரு.

வாகனஓட்டிகளுக்கு சிரமம்

நீலிக்கோணாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தை சுற்றியுள்ள, 55வது வார்டுக்குட்பட்ட கணபதி நகர், ஆர்.கே.கே.நகர், வசந்தா மில் காலனி பகுதியில், ரோடு மோசமாக சேதமடைந்துள்ளது. தார் பெயர்ந்து பல இடங்களில் பள்ளமாக உள்ளது. வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.- ராபர்ட், 55வது வார்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை