உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரியில் நுண்கலையியல் சங்கம் துவக்கம்

கல்லுாரியில் நுண்கலையியல் சங்கம் துவக்கம்

சூலுார்: சூலுார் ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் நுண்கலையியல் சங்க துவக்க விழா நடந்தது.சூலுார் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில், இள மேலாண்மையியல் பள்ளி சார்பில் நுண்கலையியல் சங்கம் துவக்க விழா நடந்தது. கோவை அண்ணா பல்கலை டீன் சரவணக்குமார் சங்கத்தை துவக்கி வைத்து பேசுகையில், அனைவரும் கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். கேள்விகள் தான் அறிவின் திறவு கோல். இச்சங்கத்தின் செயல்பாடுகள் வாயிலாக, மாணவர்கள் தங்களின் திறமை மற்றும் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும், என்றார். முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் ஐயப்ப தாஸ், மேலாண்மையியல் இயக்குனர் விவேகானந்தர் ஆகியோர் பங்கேற்றனர். சங்க பொறுப்பாளர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ